பகவான் ராமகிருஷ்ணா சொன்ன கதை
திருடனும் சந்நியாசியும்
சாது ஒருவர் காட்டு பாதையில் ஒரு ஓரத்தில் சமாதியில் ஆழ்ந்திருந்தார்.
அவ்வழியாக போன திருடன் ஒருவன் - "இங்கே படுத்திருக்கும் இந்த பேர்வழியும் திருடன்தான் போலிருக்கிறது. களைத்து போய் படுத்திருக்கிறான். சிறிது நேரத்தில் இவனை காவலர்கள் பிடித்து கொள்ள போகிரார்கள்." என்று நினைத்து தான் தப்பித்து கொள்ள வேண்டும் என அவசரமாக ஓடி போனான்.
சிறிது நேரம் கழித்து அவ்விடத்திற்கு ஒரு குடிகாரன் வந்தான். அவனும் சாதுவை பார்த்தான். அவன் இவ்வாறு நினைத்தான். "சரியான குடிகரனாய் இருப்பான் போலிருக்கிறது. மூக்கு முட்ட குடித்துவிட்டு பள்ளத்தில் கிடக்கிறான். இவனைப்போல் நான் தள்ளாடி விழமாட்டேன்" என பிதற்றிக்கொண்டே போனான்.
கடைசியாக ஒரு சந்நியாசி அங்கே வந்தார். அவரும் சாதுவை பார்த்தார்.
பார்த்தவுடனே யாரோ ஒரு மகான் சமாதியில் ஆழ்ந்திருக்கிறார் என்ற உண்மை புரிந்துவிட்டது. அவர் அந்த சாதுவின் பக்கத்தில் அமர்ந்து அவரின் திருவடிகளை பற்றி இதமாக வருடத் தொடன்கினார்.
இவ்வாறுதான் அவரவர் ஆசை, பழக்க வழக்கங்கள் உண்மையை மறைத்து விடுகின்றன.
"மரத்தை மறைத்தது மாமத யானை."
No comments:
Post a Comment