Saturday, August 6, 2011

Ramakrishna's short stories niththiya kandam poornayisu

பகவான் ராமகிரூஷ்ணரின் குட்டி கதைகள்
நித்திய கண்டம் பூர்ணாயிசு 

ஆணி மாதத்தில் ஒரு வெள்ளாடு தன் தாயுடன் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கிறது.  அப்போது அந்த குட்டி ஆடு தாயை பார்த்து ராஸலீலை என்னும் பண்டிகைக் காலத்தில் விசேஷமாக புஷ்ப்பிக்கும் ராஸ புஷ்பத்தை 
ஏராளமாக தின்று கொண்டாடப் போகிறேன் என்றது. அதற்கு தாய் ஆடு இவ்வாறு சொன்னது. நீ நினைப்பது சரிதான், ஆனால் நடைமுறையில் அது அவ்வளவு சுலமானது அல்ல. உனக்கு புரட்டாசி ஐப்பசி மாதங்களில் காலம்  சரியில்லை.  துர்கா பூஜாவிற்கு உன்னை யாரவது பலி கொடுத்துவிடப் போகிறார்கள்.   அந்த கண்டத்தில் இருந்து நீ தப்பினால் அடுத்து காளி பூஜை வந்து விடுகிறது.     அதிலிருந்தும் நீ தப்பினால் அதை விடவும் பெரிதாகிய ஆபத்தாக ஜகத்தாத்ரி பூஜை வரும்.  அப்போது உயிர் தப்பி பிழைத்திருக்கிற எல்லா ஆடுகளையுமே பலியிட்டு விடுவார்கள்.   அதிர்ஷ்டவசமாக நீ எல்லா கண்டங்களில் இருந்தும் தப்பி பிழைத்தால் கார்த்திகை மாதத்தில் வரும் ராஸ புஷ்ப பண்டிகையை உன் விருப்பப்படி கொண்டாடி மகிழலாம் என்று சொல்லி முடித்தது. 
தாய் ஆடு சொன்னதுபோல் நமது வாழ்நாளில் ஏற்படக்கூடிய கண்டங்களை உணர்ந்து செயல் பட வேண்டும்.    இளமையில் ஒருவன் எவ்வளவோ நினைக்கலாம்.     மனக்கோட்டைகள் கட்டலாம்.   ஆனால் இவையெல்லாம் நிறைவேறிவிடும் என்று நினைக்க கூடாது.   
  
  








































No comments:

Post a Comment